by admin on | 2026-11-01 07:02 PM
டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல் மூலம் ரூ.30 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் மாஸ் காட்டிய தேனி போலீஸ்....!!!!
இருவர் கைது
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பிரகாசம் என்பவர் கடந்த 10.06.2026ம் தேதி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் கடந்த 08.04.2026 அன்று வாதியிடம் விக்ரம் குமார் என்ற பெயரில் Dept of Telecom லிருந்து பேசுவதாக தொடர்புகொண்ட நபர் வாதியினுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கப்பட்டு அந்த எண்ணிலிருந்து ஆபாச புகைபடம், வீடியோக்கள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு அதனால் Bangalore, Indira Nagar காவல் நிலையத்தில் பொது மக்கள் புகார் அளித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் சொல்லி Indira Nagar Policeக்கு இணைப்பு கொடுப்பதாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதியிடம் விசாரணை செய்ததாகவும் SI Deepali என்ற பெயரில் வாட்ஸ்அப் வீடியோகாலில் போலீஸ் அதிகாரி Uniform உடன் விசாரணையை தமிழில் செய்ததாகவும் பின்பு Signal app மூலம் வாதியின் விபரங்களை ⑥ Karnataka Crime Investigation Department ريប់ លេ យល់ Canara Bankல் கணக்கு தொடங்கப்பட்டு அதன் ATM Card ஆனது Human Trafficking Mastermind Sadakat khan யை டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தபோது கிடைத்துள்ளதாகவும் பின்பு அவனது வீட்டிலிருந்து போலி ஆதார் கார்டுகள் மற்றும் 289 ATM கார்டுகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் இதனால் National Secret Investigation நடப்பதாக சொல்லி அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்களை வாதிக்கு அனுப்பியதாகவும் பின்பு இது சம்பந்தமாக CBI அதிகாரி Dayanayak என்பவர் வாதியை விசாரிப்பதாக வாதியிடம் இருக்கும் வங்கி கணக்கு விபரங்கள், Bank Locker, ATM, Cheque book, Stock market , Land Property, FD investment យ យំ பெற்றுக்கொண்டதாகவும் அதன்பின்பு Arrest & freezing warrant ஐ தடுப்பதற்கு Priority Investigation க்கு அவரது மேல் அதிகாரியிடம் பேசுகிறேன் என்றும் பின்பு Supreme Court, priority investigationக்கு அனுமதி கொடுத்துள்ளது என்றும் அதற்கு வைப்புத்தொகையாக ரூ.52,75,301/- கட்ட வேண்டுமென்றும் வாதி மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தால் அந்த தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் முடிந்த அளவு கையில் இருப்பு இருக்கும் பணத்தை அனுப்பி வைக்குமாறும் அப்போதுதான் இந்த டிஜிட்டல் அரஸ்ட்டில் இருந்த தப்பிக்க முடியும் என்று அவர்கள் சொன்ன தகவல்களை உண்மையென நம்பி வாதி தனது வங்கி கணக்கிலிருந்து அவர்கள் கொடுத்த மும்பையைச் சேர்ந்த Federal Bank வங்கி கணக்கிற்கு ரூ.30,00,000 த்தை அனுப்பி வைத்துள்ளார். பின்பு எதிரியில் பேசிய நபர்களிடமிருந்து தொடர்ந்து எந்த பதிலும் வராத காரணத்தால் வாதி தான் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஏமாற்றப்பட்ட விபரம் தெரிந்த கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் வாதியிடமிருந்து பணம் சென்றடைந்த வங்கி கணக்கானது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தது என்றும் மேலும் இந்த வங்கி கணக்கிலிருந்து உடனடியாக மற்றொரு வங்கி கணக்கிற்கும் ரூ.15,00,000 அன்றே மாற்றப்பட்டிருப்பதும் அந்த வங்கி கணக்கும் மும்பையில் இருக்கும் விபரம் விசாரணையில் தெரியவந்தது.
மேற்கண்ட இரண்டு வங்கி கணக்குகளுக்குச் சொந்தமான இந்த டிஜிட்டல்
அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன் கௌதம், I.P.S அவர்களின் உத்தரவின் பேரிலும், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெரால்டு அலெக்ஸாண்டர் அவர்களின் மேற்பார்வையிலும் தேனி மாவட்ட சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான தனிப்படையினர் உரிய அனுமதி பெற்று மும்பை சென்று அங்கு ரகசிய விசாரணை செய்து இந்த ល់ FULL 1.VINOD SANDEEP SINGH, VASHI NAVI MUMBAI 400703, 2. SULTAN MAQBOOL DAIRE, GHODBANDRA ROAD THANE MAHARASHTRA - 400615 शुभ 28.10.2026 அன்று கைது செய்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி எதிரிகளை மும்பை உள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு Trasit Warrant மூலம் இன்று 31.10.2026 ம் தேதி தக்க வழிக்காவல் மூலம் தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்து பின்பு தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைத்தனர்.
“டிஜிட்டல் அரஸ்ட்” என்ற பெயரில் வீடியோ அழைப்பில் ஒருவரைக் கைது செய்து விசாரிக்கும் சட்ட நடைமுறை இல்லை. "வழக்கை முடிக்க", "கணக்கைச் சரிபார்க்க” அல்லது “வைப்புத்தொகை செலுத்தினால் பணம் திருப்பித் தரப்படும்” என்று கூறி பணம் அனுப்பச் சொன்னால் அனுப்ப வேண்டாம். வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள், OTP, ஆதார் நகல் போன்ற தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களை அறிமுகமற்றவர்களுடன் பகிர வேண்டாம். தெரியாதவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பகிரப்பட்டும் செயலிகளைப் பதிவிறக்கவோ, திரையைப் பகிரவோ வேண்டாம்.
பணம் மோசடியால் ஏமாற்றபட்டிருந்தால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு, தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ அல்லது தேசிய சைபர் குற்றப் புகார் இணையதள முகவரி www.cybercrime.gov.in மூலமாகவோ புகார் அளிக்கலாம். இவ்வகையான குற்றங்களில் ஆதாரங்களை சேமிப்பது முதற்கடமையாகும். ஏனெனில் இவ்வகை ஆதாரங்களின் மூலம் சைபர் குற்றவாளிகளை அடையாளங்காண்பதோடு இல்லாமல் மற்ற நபர்களுக்கும் இதே முறையில் சைபர் குற்றம் ஏற்படாமல் தடுக்கலாம் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
T.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!
கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!
முன்னாள் குமரியின் ஹீரோ இனி தென்காசியில் வேட்டை ஆரம்பம்.....!!!!
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு …..!!! இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்.....!!!!!