by satheesh on | 2026-09-30 04:22 PM
தங்க தகடு விற்பதாக கூறி 48 லட்சம் மோசடி செய்ததாக ஏமாற்றிய வழக்கில் 2 காவலர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகத்தில், தங்க தகடு விற்பதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கீழப்புதூர் ஒச்சாத்தேவர் தெருவைச் சேர்ந்த பால் ஆனந்த தீலன் மகன் சுமித் ராபர்ட் பால் (34) என்பவர் கொடுத்த புகார் சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், உத்தரவின்பேரில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் அவர்களின் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் முத்துக்குமரன், சார்பு ஆய்வாளர் வாணி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையை அமைத்து விசாரணை செய்து எதிரிகளை தேடிவந்த நிலையில் கீழ்க்கண்ட எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
1. சங்கரமூர்த்தி (50), த.பெ. சண்முகம், கனரா வங்கி அருகில், பட்டிவீரன்பட்டி
2. நாகராஜ் (47), த.பெ. பாலச்சாமி, மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, தேனி
3. கருப்பையா (36), த.பெ. சிதம்பரம், மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, தேனி
4. சுரேஷ் (38), த.பெ. முருகன், மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, தேனி
5. முத்துப்பாண்டி, த.பெ. தாசி, குறும்பப்பட்டி, வத்தலகுண்டு
6. குப்புசாமி (40), த.பெ. சுப்பிரமணி, ராசிமலை, மஞ்சளாறு அணை, தேனி
7. தங்கராஜ் (காவலர்), ஜெயமங்கலம் காவல்நிலையம், தேனி
8. கதிரேசன் (காவலர்) தென்கரை காவல்நிலையம், தேனி
மேற்படி எதிரிகளிடமிருந்து பணம் ரூ.6 லட்சம், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரக கனரா வங்கி அருகில் வசித்து வரும் சண்முகம் மகன் சங்கரமூர்த்தி (50) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பழக்கமாக இருந்து வந்துள்ளார். சங்கரமூர்த்தி அம்பிளிக்கை மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும், சங்கரமூர்த்தியும் தேனிமாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையைச் சேர்ந்த பாலச்சாமி மகன் நாகராஜ் (47) என்பவரும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். சுமித் ராபர்ட் பால் என்பவரிடம் அதிக அளவில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த சங்கரமூர்த்தி, நாகராஜ் மற்றும் மஞ்சளாறு அணையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் கருப்பையா (36), முருகன் மகன் சுரேஷ் (38), குறும்பட்டியைச் சேர்ந்த காசி மகன் முத்துப்பாண்டி, ராசிமலையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குப்புசாமி (40) ஆகியோர் ஒன்றிணைந்து, தங்களிடம் விலை உயர்ந்த ராசியான தங்கக்கட்டி இருப்பதாகவும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் எனவும் சுமித் ராபர்ட் பாலிடம் ஆசை வார்த்தையை கூறியுள்ளனர். இதனை நம்பிய சுமித் ராபர்ட் பால், கடந்த 16.05.2026 அன்று பட்டிவீரன்பட்டி ஓம் சக்தி கோவில் தெருவில் வைத்து ரூ.48 லட்சம் பணத்தை சங்கரமூர்த்தியிடம் வழங்கியுள்ளார். பின்னர், தங்கத்தகடு நாகராஜிடம் இருப்பதாகக் கூறி, சங்கரமூர்த்தி அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நாகராஜ், குப்புசாமி மற்றும் சுரேஷ் ஆகியோர் இருந்த நிலையில், அவர்களிடம் பணத்தை வழங்கி தங்கத்தகடை பெற்றுக்கொண்டு சுமித் ராபர்ட் பால் காரில் திரும்பி வந்துள்ளார். அப்போது, ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் தங்கராஜ் மற்றும் தென்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் கதிரேசன் ஆகிய இருவரும் தேவதானப்பட்டியில் வாகன சோதனை செய்வது போல் காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகக் கூறி வாகனத்தின் உள்ளே இருந்த தங்கத்தகடை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். இதனால் பயந்து போன புகார்தாரர் காவல் நிலையம் செல்லவில்லை உடனே நாகராஜை அழைப்பேசியில் தொடர்பு கொண்டபோது, சம்பந்தப்பட்ட காவலர்கள் தனக்கு தெரிந்தவர்கள் என்றும், தான் பார்த்துக்கொள்வதாகவும் நாகராஜ் தெரிவித்துள்ளார். பின்னர், முத்துப்பாண்டி, நாகராஜ், சங்கரமூர்த்தி, கருப்பையா, சுரேஷ், குப்புசாமி மற்றும் இரண்டு காவலர்கள் ஆகியோர் சேர்ந்து ரூ.48 லட்சம் பணத்தை தங்களுக்குள்ளாக பிரித்துக் கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமித் ராபர்ட் பால் தான் வழங்கிய ரூ.48 லட்சம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். அந்த பணத்தை திரும்ப வழங்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட எதிரிகளை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை சில மணி நேரங்களிலேயே கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், வெகுவாக பாராட்டினார்.
இணை ஆசிரியர் :N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!!
தங்கத் தகடு மோசடி - போலி வாகன சோதனை ! 2 போலீஸ் உட்பட எட்டு பேர் அதிரடி கைது !!
மேகமலையில் 98 கிராம மக்களை வெளியேற்றும் விவகாரம் - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் !
தீராத லாட்டரி மோகம் - தனியாத அதிர்ஷ்ட தாகம் ! கோடிகளை அடைய நினைத்த முதியவர் - கோடிகளை இழந்த பரிதாபம் !!
டி.ஸ்.பி., யின் நேர்மை இந்து எழுச்சி முன்னணி பாராட்டு....!!!!