by admin on | 2026-11-25 01:10 PM
திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்:
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் : 17 பக்கம் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் மதுரை மாவட்ட ஆட்சியர்
1.தீப தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தானத்தால் குழு அமைக்கப்பட்டு பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
2.தேவஸ்தானம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்து பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீப தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை
3.தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது
4.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டு திரு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மேலும், அந்த அறிக்கையில் , தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 20 ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும்21ம் தேதி இந்து சமய அற நிலைய துறை ஆணையருடனும், காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுஇதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தாசில்தார் மற்றும் பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு பத்தி வாரியாக விளக்கம் அளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து நபர்களுக்கு மிகாமல் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது
தீபத்தை பொறுத்தவரை கோயில் வழக்கப்படி செயல் அலுவலரால் விளக்கு ஏற்றும் முறை தீர்மானிக்கப்படும்
சி ஆர் பி எஃப் படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்றும் தமிழக காவல்துறை படைகளை நிலை நிறுத்தும் திட்டம் தயாராக உள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்
24 ஆம் தேதி தீபம் ஏற்றும் பணியானது தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கொண்ட குழுவினரால் மட்டுமே பிரத்தியேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையை எடுக்க தேவஸ்தான செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது
இதனிடையில் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் அணி திரளுவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் நம்பகத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் போராட்டங்கள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கும் எந்த ஒரு நபருக்கும் தடைவிதிக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் பி.என்.எஸ்.எஸ் பிரிவு 163 இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்தத் தடை உத்தரவானது 25ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது
இதனை எடுத்து 24 ஆம் தேதி காலை முதல் நண்பகல் 12 அரை மணி வரை நேரடியாக திருப்பரங்குன்றம் சென்று அந்த இடத்தில் செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஏற்பாடுகளை ஆய்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை ஆணையருடன் கலந்துரையாடப்பட்டது
இதனை அடுத்து தீபம் ஏற்றும் நிகழ்வு நேரமான மாலை 6 முதல் 6:30 மணி வரைக்குள்ளாக தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது*
ஆனால் மாலை 6 மணி முதல் 6:30 மணி வரையிலான காலகட்டத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபமேற்ற வரவில்லை
தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கு அதிகாரம் அளித்து கோயில் தேவஸ்தானம் எந்த ஒரு கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கவில்லை
தேவஸ்தானத்திற்கு விளக்கேற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு அமைத்து அதன் நபர்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை
இது தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சல் நினைவூட்டல் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் செய்திருந்தேன்
ஆனால் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டு திரு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
தேவஸ்தானம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்து பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீப தூணில் தீபம் ஏற்ற வில்லை
அதே வேளையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எடுத்ததாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது குறித்து மதுரை ஆட்சியரின் தில்லாலங்கடி பதில்...!!!!
பெண்கள் எத்தனை காலம் தான் இன்னல்களை சந்திக்க வேண்டும்....??? ப.ஹரிஹரன்...!!!
அறங்காவலர் குழு முடிவின்படி உச்சப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது....!!"
அரசியல் சாதுரியத்தில் திமுகவை மிஞ்சிய தவெக அரசு....!!! இந்து எழுச்சி முன்னணி குற்றச்சாட்டு....!!!!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு ! நீதிமன்றம் அறிவுறுத்தல் - முடித்து வைப்பு !!