| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2026-03-18 01:39 PM

Share:


பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலச்சத்திரம் பகுதியில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,01,000 ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கப் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட மூலச்சத்திரம் பகுதியில் நிலைக்கண்காணிப்புக் குழுத் தலைவர் தனபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில் வந்த அண்ணாமலை என்பவரின் மனைவி பாண்டியம்மாள்தேவி என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1,01,000 ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

தேர்தல் விதிமுறைப்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆதாரமின்றிப் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பதால், அந்தப் பணத்தைப் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமுருகன் அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பணம் அரசுப் பாதுகாப்புடன் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழுவின் பரிசீலனைக்குப் பின் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால், பொதுமக்கள் அதிகப்படியான பணத்தைக் கொண்டு செல்லும்போது முறையான வங்கி ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment