by admin on | 2026-08-07 02:20 PM
ஒரே நாளில் ஏற்பட்ட பிரச்சனை அல்ல....!!!
பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையில் திராவிட அரசியல் மட்டுமே செய்தன. திராவிட கட்சிகள் பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக கையாளவில்லை. உடனடியாக TVK அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல. ஆனால் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தற்போதைய அரசு முழுமையாக முயற்சி எடுக்க வேண்டும்...
மேகமலையில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் சூழ்நிலைக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் வகையில் தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருசநாடு வட்டார மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் வெறும் நிலத்திற்கான போராட்டம் அல்ல; தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தங்களது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் போராட்டமாகும். மக்களின் மனவேதனையையும் கோரிக்கையையும் அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.
இந்தப் போராட்டத்தின் உண்மை நிலையை அரசு அதிகாரிகள், ஆளும் அரசியல் கட்சியினர் மற்றும் செய்தியாளர்கள் தமிழக அரசின் கவனத்திற்கு முழுமையாக எடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, தமிழக அரசு விரைந்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!