by admin on | 2026-09-07 04:51 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (07.09.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 476 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்டத்துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, மனுக்களைப் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். கோரிக்கை அதனைத்தொடர்ந்து, 30 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பில், ரூ.21,70,550/- மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .இராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலஅளவை) கதிர்வேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டன
T. Muthukamatchi evidence Editor 9842337244
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!