by admin on | 2026-08-08 06:23 PM
தேனி சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் எம். சந்திரபாண்டியன் சொந்த மாவட்டக் காவல் துறைக்குத் திரும்ப அனுப்பப்பட்டு, ஜி.விளக்கு காவல் நிலையத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளரால், கடந்த 25.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை எண்: D.O.No.815/SB/2026 (C.No.Estt 1(2)/SB/E-14313132/2026)-ன் படி, தேனி சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைப் பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் திரு. எம். சந்திரபாண்டியன் (HC 1952) நிர்வாகக் காரணங்களுக்காக அவரது தாய் பிரிவான தேனி மாவட்டக் காவல் துறைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் 01.08.2026 முற்பகல் அன்று தேனி மாவட்டக் காவல் அலுவலகத்தில் பணிக்கு ஆஜராகி, மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையில் VR இல் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலையத்தில் காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கூறிய தலைமைக் காவலர் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட க.விலக்கு காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளும் தேதியை, சம்பந்தப்பட்ட காவல் .ஆய்வாளர் உடனடியாக தேனி மாவட்டக் காவல் அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரபாண்டி க. விலக்கு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!