by satheesh on | 2026-09-21 11:35 AM
என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..?" மனைவியிடம் வாலிபர் கேட்டதால் ஆத்திரம்.. 5 ஆண்டுகள் காத்திருந்து கொலை செய்த கணவன்.. குலை நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்..!! கன்னியாகுமாரி மாவட்டம் - இரணியல் அருகே, தனது மனைவிக்கு ஆபாசத் தொந்தரவு கொடுத்த வாலிபரை 5 ஆண்டுகள் கழித்துப் பழிதீர்க்கும் விதமாக, கறி விருந்து கொடுத்து நண்பனை கொலை செய்த நண்பன் ...!
கன்னியாகுமாரி மாவட்டம் - இரணியல் அருகே, தனது மனைவிக்கு ஆபாசத் தொந்தரவு கொடுத்த வாலிபரை 5 ஆண்டுகள் கழித்துப் பழிதீர்க்கும் விதமாக, கறி விருந்து வைப்பதாகக் கூறி மதுபோதையில் அடித்துக் கொலை செய்து குளத்தில் வீசிய சிவில் இன்ஜினியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.bபூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஆல்பின் ராஜேஷ் (31) என்ற கொத்தனார், காடேற்றி குளத்தில் அரை நிர்வாண சடலமாக மீட்கப்பட்டார். போலீஸாரின் தீவிர விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒன்றாகத் தங்கியிருந்தபோது, சார்லி ஜோஸ் என்பவரின் மனைவிக்கு ஆல்பின் ராஜேஷ் அலைபேசியில் ஆபாசத் தொந்தரவு கொடுத்ததும், "உல்லாசமாக இருக்க வரியா" என அழைத்ததும் தெரியவந்தது. இந்நிலையில், சொந்த ஊர் திருவிழாவிற்கு வந்த சார்லி ஜோஸ், தற்செயலாக டாஸ்மாக்கில் ஆல்பின் ராஜேஷை சந்தித்து அவரது எண்ணைப் பெற்றுள்ளார். பழைய பகையைத் தீர்க்கத் திட்டமிட்ட அவர், கறி விருந்து மற்றும் மது பார்ட்டி இருப்பதாகக் கூறி ஆல்பின் ராஜேஷைக் குளக்கரைக்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது நண்பர்களான சுபின் மற்றும் சுமன் ஆகியோருடன் சேர்ந்து ஆல்பின் ராஜேஷை மது குடிக்க வைத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில் படித்துறையில் தலையை மோதி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தின் ஆடைகளை எரித்துவிட்டு உடலைக் குளத்தில் வீசிவிட்டுப் பதுங்கியிருந்த மூவரையும், அலைபேசி சிக்னல் லொகேஷனை வைத்து போலீஸார் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்தனர்.வைப்பதாகக் கூறி மதுபோதையில் அடித்துக் கொலை செய்து குளத்தில் வீசிய சிவில் இன்ஜினியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.bபூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஆல்பின் ராஜேஷ் (31) என்ற கொத்தனார், காடேற்றி குளத்தில் அரை நிர்வாண சடலமாக மீட்கப்பட்டார். போலீஸாரின் தீவிர விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒன்றாகத் தங்கியிருந்தபோது, சார்லி ஜோஸ் என்பவரின் மனைவிக்கு ஆல்பின் ராஜேஷ் அலைபேசியில் ஆபாசத் தொந்தரவு கொடுத்ததும், "உல்லாசமாக இருக்க வரியா" என அழைத்ததும் தெரியவந்தது. இந்நிலையில், சொந்த ஊர் திருவிழாவிற்கு வந்த சார்லி ஜோஸ், தற்செயலாக டாஸ்மாக்கில் ஆல்பின் ராஜேஷை சந்தித்து அவரது எண்ணைப் பெற்றுள்ளார். பழைய பகையைத் தீர்க்கத் திட்டமிட்ட அவர், கறி விருந்து மற்றும் மது பார்ட்டி இருப்பதாகக் கூறி ஆல்பின் ராஜேஷைக் குளக்கரைக்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது நண்பர்களான சுபின் மற்றும் சுமன் ஆகியோருடன் சேர்ந்து ஆல்பின் ராஜேஷை மது குடிக்க வைத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில் படித்துறையில் தலையை மோதி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தின் ஆடைகளை எரித்துவிட்டு உடலைக் குளத்தில் வீசிவிட்டுப் பதுங்கியிருந்த மூவரையும், அலைபேசி சிக்னல் லொகேஷனை வைத்து போலீஸார் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்த போலீஸ்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெண்கள் எத்தனை காலம் தான் இன்னல்களை சந்திக்க வேண்டும்....??? ப.ஹரிஹரன்...!!!
அறங்காவலர் குழு முடிவின்படி உச்சப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது....!!"
அரசியல் சாதுரியத்தில் திமுகவை மிஞ்சிய தவெக அரசு....!!! இந்து எழுச்சி முன்னணி குற்றச்சாட்டு....!!!!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு ! நீதிமன்றம் அறிவுறுத்தல் - முடித்து வைப்பு !!
சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியீடு...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்கள்...!!"