| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!

by satheesh on | 2026-09-15 06:18 PM

Share:


கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை  தூக்கிய போலீஸ் !!

கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம்.. இடையூறு செய்த கணவருக்கு நேர்ந்த கதி!

பெங்களூரில் கள்ளக்காதலன் மற்றும் தாய் ஆகியோருடன் சேர்ந்து பெண் ஒருவர் பக்கவாதம் பாதித்த கணவரை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடி சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு பெங்களூர் அவலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எல்லப்பா கார்டனில் வசித்து வந்தவர் முபாரக். இவருக்கும் ஷாஹினா பானு என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முபாரக்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் எழுந்து நடமாடவில்லை. வேலைக்கு செல்ல முடியாத நிலை வந்தது. இதனால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியது. இந்த சமயத்தில் ஷாஹினா பானுவின் குடும்பத்துக்கு அதே பகுதியை சேர்ந்த நஹிம் குரேஷி என்பவர் உதவி செய்தார். உணவு பொருட்கள், செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நஹிம் குரேஷி மற்றும் ஷாஹினா பானு ஆகியோர் இடையேயான பழக்கம் நட்பாக மாறியது இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேச தொடங்கினர். இந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. கணவர் முபாரக் வீட்டில் படுக்கையில் இருக்கும்போதே நஹிம் குரேஷி வீட்டுக்கு வந்து ஷாஹினா பானுவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை முபாரக் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஷாஹினா பானு கணவர் முபாரக் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதினார். அதோடு அவரை தீர்த்து கட்டிவிட்டு கள்ளக்காதலன் நஹிம் குரேஷியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதுபற்றி அவர் கள்ளக்காதலன் நஹிம் குரேஷி மற்றும் தாய் ஹசீனாவிடம் கூறினர். இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கடந்த 9 ம் தேதி படுக்கையில் படுத்து கிடந்த முபாரக்கை அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பிறகு கொலையை மறைக்க அவர்கள் நாடகமாடினர். முபாரக் உடல்நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் நடத்தையில் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. இதுபற்றி அவர்கள் அவலஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து முபாரக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது முபாரக் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷாஹினா பானுவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவரை கொன்று கள்ளக்காதலன் நஹிம் குரேஷியுடன் வாழ முடிவெடுத்து கொலை செய்தேன். இதற்கு கள்ளக்காதலன் நஹிம் குரேஷி, தாய் ஹசீனா உதவினர் என்று கூறினார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment