by admin on | 2026-09-12 08:32 PM
தேனி மாவட்டம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தெரிவு செய்யப்பட்ட 613 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்!!!
தேனி மாவட்டம், கம்பம் CPU மேல்நிலைப் பள்ளியில் இன்று (12.09.2026) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தெரிவு செய்யப்பட்ட 613 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் முன்னிலையில் பணி நியமன ஆணைகளை வழங்கி தெரிவிக்கையில்,
வேலையில்லாத இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதுதான் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும். அதனடிப்படையில், இன்றையதினம் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, இந்நிறுவனங்களால் 8000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, 1800-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்றதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 613 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளும், 269 நபர்களுக்கு முதல்நிலைத் தேர்விற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையில் இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. குறிப்பாக மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தக்கூடிய ஒரு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். ஆகையால், இன்றையதினம் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக அப்பணியில் சேர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று இனிவரும் காலங்களில் அனைத்து வட்டங்களிலும் சுழற்சி முறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். எனவே, இன்றையதினம் பணிநியமன ஆணைகளை பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று, போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, பல்வேறு அரசுத்துறைகளில் பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இம்முகாமில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.சையது முகமது இப்ராஹிம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.வீராச்சாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ரமாபிரபா, கம்பம் நகராட்சி ஆணையாளர் திரு.உமாசங்கர், உத்தமபாளைம் வட்டாட்சியர் திரு.பாலசுப்ரமணியன், CPU மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு.சையது அப்தாஹிர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!