| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !

by satheesh on | 2026-08-08 08:27 PM

Share:


கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை*- கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு.


கோவை:: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் நடைபெறும் இந்த சோதனைகள், மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய சில நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவருடன் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகளின் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சோதனை நடைபெறும் இடங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. லாட்டரி மார்ட்டின் தொடர்பான பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சோதனை முடிவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் ஆதம் அர்ஜுனாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் திமுகவிற்கு கட்சி நிதி வாங்கியதாக காரசார விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment