by satheesh on | 2026-09-14 01:53 PM
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சேர்ந்த அம்சவள்ளி (38) என்ற பெண், கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பாததால், அவரது மகள் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். காணாமல் போன பெண்ணின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக தேனியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டரான அப்துல் ரகுமான் (36) என்பவரிடம் பேசியது காவல்துறைக்குத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே, அப்துல் ரகுமான் வீட்டில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள்ளேயே இருந்த அப்துல் ரகுமான் அருகே, சாக்கு மூட்டையில் தலையில் பலத்த காயங்களுடன் அம்சவள்ளி சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் அவரைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அப்துல் ரகுமானைக் கைது செய்தனர். செல்போன் மூலம் "பழக்கம்" ஏற்பட்டுள்ளது. அந்த "பழக்கத்தில்" இருவருக்கும் இடையே இருந்த பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில், வாக்குவாதத்தில் தலையில் கல்லால் தாக்கி அம்சவள்ளியைக் கொன்ற அப்துல் ரகுமான், உடலை வெளியே வீச முடியாமல் சாக்கு மூட்டை கட்டி 3 நாட்களாகப் பிணத்துடனேயே வீட்டிற்குள் தங்கியிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெண்ணை கொலை செய்து விட்டு மூன்று நாட்களாக அதே வீட்டிற்குள் இருந்த நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், மேலும் பெண்ணின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு அனுப்பி வைத்துள்ளனர். குடியிருப்பு மத்தியில் பெண்ணை கொலை செய்து மூன்று நாட்களாக உடல் உடன் இருந்த நபரை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது கொடுக்கல் வாங்கல் தகராறு தானா ? இல்லை வேறு "ஏதேனும்" காரணங்கள் உள்ளதா ,? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!