| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!

by satheesh on | 2026-08-08 09:48 PM

Share:


கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!

உசிலம்பட்டி.: ஆந்திராவில் 313 கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிவந்த குற்றவாளியை உசிலம்பட்டி அருகே ஆந்திரா போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்., வடமாநிலத்தில் முறுக்கு தொழில் செய்ய கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றவர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தொழிலதிபராக வளர்ந்ததாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சொந்த வீடுகள் உள்ளதாக கூறப்படும் இவர் கடந்த 2 ஆம் தேதி 313 கிலோ 500 கிராம் கஞ்சா கடத்தியதாக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் தகதத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெயபால் - யை தீவிரமாக தேடி வந்தனர். கடத்தலில் ஈடுபட்டவர் உசிலம்பட்டி தப்பி ஓடி வந்தாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநில போலீசார், உசிலம்பட்டி போலீசார் உதவியுடன் இன்று காலை ஜெயபால்-ன் சொந்த ஊரான கன்னியம்பட்டியில் வைத்து குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். அதிகாலையிலேயே கிராமத்தில் போலீசார் புகுந்து குற்றவாளியை கைது செய்து சென்ற சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம் .தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment