| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!

by satheesh on | 2026-09-19 09:16 AM

Share:


அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆப்பு! தவெக அரசு திடீர் அதிரடி உத்தரவு!

அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பதவிகள்: நிர்வாக அலுவலர் (Administrative Officer - AO) இளநிலை நிர்வாக அலுவலர் (Junior Administrative Officer - JAO)அலுவலகக் கண்காணிப்பாளர் (Office Superintendent - OS), உதவியாளர் (Assistant) மேற்குறிப்பிட்ட பணியிடங்களில் உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் சேகரித்து      வரும் 23.09.2026-க்குள் சமர்ப்பிக்க . வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இது மிகவும் அவசரமானது என்று சுற்றறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, பதவி உயர்வு வரும்போது ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாட்களிலேயே, நிர்வாகக் காரணங்களைக் காட்டி அல்லது தற்காலிகப் பணி மாற்றம் மூலமாக மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பிவிடுகின்றனர். இத்தகைய உத்திகளைக் கையாண்டு பழைய இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கும் நபர்களையும் அரசு குறிவைத்துள்ளது. பதவி உயர்வில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பழைய பணி இடத்திற்கே திரும்பி வந்தவர்கள் யார்? அவர்கள் எப்போது திரும்பினார்கள்? அதற்கான காரணம் என்ன? என்ற விவரங்களையும் கட்டாயம் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று அரசு தெளிவாகக் கேட்டுள்ளது. ஒரு அரசு ஊழியர் ஒரே இடத்தில், குறிப்பாகக் கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு கருதுகிறது.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment