by admin on | 2026-08-08 06:44 PM
தேனி மாவட்டம். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இன்று (08.08.2026) நீர்வளத்துறை சார்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப. அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி. வீதமும் என மொத்தம் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் இன்றுமுதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்னீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14.707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் .க.சபரி ஐங்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், வருவாய் கோட்டாட்சியர் (உத்தமபாளையம்) சையது முகைதீன் இப்ராஹிம், செயற்பொறியாளர்கள் (பெரியாறு வைகை வடிநில கோட்டம்) திரு.ச.சிவப்பிரபாகர், சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் (பெரியாறு அணை, கம்பம்) திரு.சி.செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் திருமதி மல்லிகா. ராஜகோபால், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) திரு.பாலசண்முகம் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!