by admin on | 2026-08-08 07:16 PM
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடுஅரசு செவிலியர் சங்கத்தினர் மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவதுநாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்*
ஆட்குறைப்பு அரசாணைஎண் 204 ஐ ரத்து செய்யவேண்டும், தொகுப்பூதிய முறையை ரத்துசெய்து தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி - தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவதுநாளாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடுஅரசு செவிலியர் சங்கத்தினர்*
தமிழகம் முழுவதும் பணிபுரியும் தமிழ்நாடுஅரசு செவிலியர் சங்கத்தினர்
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்வது காலையில் 1மணி நேரம் பணியை புறக்கணித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என
மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்திவரும் நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடுஅரசு செவிலியர் சங்கத்தினர் ஆட்குறைப்பு அரசாணை எண் 204 ஐ ரத்து செய்யவேண்டும் தொகுப்பூதிய முறையை ரத்துசெய்து தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் செவிலியர் அலுவலரை நர்சிங்ஆபீஸர் என பெயர்மாற்றம் செய்து வறன்முறை அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவதுநாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகஅரசுக்கு இந்த மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்தும், இதனை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!