எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!
by satheesh on |
2026-08-08 02:44 PM
Share:
Link copied to clipboard!
தொடரும் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்..
₹10 ஸ்டிக்கர் எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் – கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களின் உறுதியான போராட்டம் தொடர்கிறது!"
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், ₹10 ஸ்டிக்கர் எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் என்ற ஒருமித்த முடிவின் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதிலுமிருந்து திரண்ட பணியாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை காவல்துறையினர் அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தொழிற்சங்கத் தலைவர்களை மாவட்ட மேலாளர் மூன்று முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காவல்துறை அதிகாரிகளும் சமரச முயற்சியில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ₹10 ஸ்டிக்கர் எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் என்ற பணியாளர்களின் உறுதியான நிலைப்பாட்டிலும், நிர்வாகம் தனது பிடிவாதமான அணுகுமுறையை மாற்ற மறுத்ததாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே, பணியாளர்களின் உரிமைக்கான இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். நிர்வாகம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உரிய தீர்வு வழங்கும் வரை எங்கள் போராட்டம் பின்வாங்காது. இந்தப் போராட்டம் நாளையும் தொடரும் என்பதை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.