by admin on | 2026-08-05 11:27 AM
தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண்டன அறிக்கை
தஞ்சாவூரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தின்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையினர், பொதுமக்களுக்கு உண்மையான தகவல்களை கொண்டு சேர்க்கும் உயரிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஊடகச் சுதந்திரத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரான செயலாகும்.
எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தவோ, தாக்கவோ யாருக்கும் அதிகாரமோ உரிமையோ இல்லை. இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், செய்தி சேகரிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகளை தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும், பாதிக்கப்பட்ட நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு எங்களது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ப. ஹரிஹரன்
தலைவர்
தமிழக பத்திரிக்கையாளர் சங்கம்
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!