| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!

by admin on | 2026-08-07 05:01 PM

Share:


உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!

தேனி மாவட்டம், தேனி பங்களாமேடுப் பகுதியில் இன்று (07.08.2026) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் உலகத்தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு விழிப்புணர்வு நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பாலின் பங்கு. முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்டு 1 முதல் 7 வரை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

அதனடிப்படையில் இன்றையதினம் பங்களாமேடு பகுதியில் தாய்ப்பானூட்டுதல் வளர்ச்சிக்கான வாழ்க்கையின் ஆரம்பம், தாய்ப்பானூட்ட ஆதரவளிக்கும் அமைப்புகளை பலப்படுத்துவோம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் மகத்துவம் குறித்து தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் தாய்ப்பால் வழங்குவதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பதை வலியுறுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி தேனி பங்களாமேடுப் பகுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவுப்பெற்றது. இப்பேரணியில் அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார பயிற்சி மாணவர்கள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தாய்மார்களுக்கு வழங்கி ஏற்படுத்தினார். கர்ப்பிணி

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி ரேவதி, மாவட்ட தாய்-சேய் நல அலுவலர், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment