by admin on | 2026-07-28 12:56 PM
Date:28.07.2026
தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர்
ப.ஹரிஹரன் கண்டன அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன், தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் யூடியூபர் சிவா மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
சோளிங்கர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிக்கையாளர்களை தாக்கியதுடன், அவர்கள் பதிவு செய்த காணொளிகளை அழிக்க வற்புறுத்திய சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. இது பத்திரிக்கையாளர்களின் பணியில் நேரடியாக தலையிடும் செயலாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் செய்தி சேகரிப்பதை தடுக்கவும், பத்திரிக்கையாளர்களை மிரட்டவும், தாக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. அரசியல் பதவியோ, அதிகாரமோ, செல்வாக்கோ சட்டத்திற்கு மேலானது அல்ல. பத்திரிக்கையாளர்கள் மீது கை வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறி வருகிறது. இந்த நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. பத்திரிக்கையாளர்களை மிரட்டினால் உண்மையை மறைக்கலாம். தாக்கினால் செய்திகளைத் தடுக்கலாம் என்ற எண்ணத்தில் செயல்படுபவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடியாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பத்திரிக்கையாளர்களின் செல்பேசிகளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அழித்த சம்பவம் குறித்தும் முழுமையான விசாரணை நடத்தி, அதற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றி அமல்படுத்த வேண்டும்.
பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முடியாது. ஜனநாயகத்தின் குரலை எந்த அதிகாரத்தாலும் அடக்க முடியாது. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை மட்டுமல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்புமாகும்.
ப. ஹரிஹரன் தலைவர்
H/O: Door No: 25, Flat No
: 2, Jaisri Towers, Alagiri Nagar
1st street, Vadapalani,
Chennai - 600026
www.tamilagajournalistunion@gmail.com
Cell: 82200 85997
பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்...!!! தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிஹரன் கண்டனம்....!!!
இரண்டு பள்ளி மாணவர்கள் கொடூர கொலை ! கொலைகாரன் கைது !!
உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி கொலை....??? கணவன் கைது....!!!
நான் ரெடி முதல்வர் விஜய் .!!!! நீங்கள் ரெடியா...???
இளைய தலை முறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் துவக்கம்...!!!