| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!

by satheesh on | 2026-09-25 02:46 PM

Share:


 கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!

சூட்கேஸுக்குள் அழுகிய உடல் - 2வது புருஷனோடு ஜாலி லைப் ! 5 வருஷம் கழித்து சிக்கிய ஸ்பா அழகி - சேலத்தை நடுநடுங்க வைத்த சம்பவம்.!!

சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, இவர் தனது வாடகை வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு பெரிய சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்போதே சேலம் மாநகரையே பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியது.. இக்கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் பகீர் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேஜ்மண்டலிடம் பணிபுரிந்த லப்லு, அவரது மனைவி நிஷி, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய வங்கதேசத்தைச் சேர்ந்த நால்வரே இக்கொலையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு வழக்கொன்றில் சிக்கிய லப்லு மற்றும் நிஷிக்கு தேஜ்மண்டல் உதவ மறுத்ததோடு, அவர்கள் இரவும் பகலும் உழைத்த பணத்திற்கும் சரியான சம்பளம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். போதாகுறைக்கு, நிஷியுடன் தேஜ்மண்டலுக்கு இருந்த தவறான உறவு மற்றும் சம்பள பாக்கி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த தம்பதியினர், அவரைக் கொன்று நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர். திட்டமிட்டபடி, நால்வரும் சேர்ந்து தேஜ்மண்டலை வளைத்துப் பிடித்து, சேலையால் அவரது கை, கால்களை இறுக்கக் கட்டி, வாயில் துணியைத் திணித்து மூச்சுத்திணற அடித்துக் கொன்றனர். பின்னர் சடலத்தைச் சூட்கேஸில் அமுக்கி வைத்துவிட்டு, நகை மற்றும் ரொக்கப் பணத்துடன் அங்கிருந்து நைஸாகத் தப்பினர். சிசிடிவி பதிவுகள் மூலம் அஸ்தம்பட்டி போலீசார் கொலையாளிகளை அடையாளம் கண்டபோதிலும், இந்தக் கும்பல் பெங்களூரு வழியாகத் தங்களது சொந்த நாடான வங்கதேசத்திற்கே தப்பி ஓடிவிட்டது. ஐந்து ஆண்டுகளாகக் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக வாழ்ந்த நிஷி, மீண்டும் ஆள் அடையாளத்தை மாற்றி ரகசியமாக இந்தியாவுக்குள் ஊடுருவினார். புனேவில் பதுங்கிய அவர், கர்நாடகாவைச் சேர்ந்த பரசுராம் நாடார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, பெண் குழந்தையோடு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், சேலம் மாநகர கமிஷனரின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ரகசியத் தகவலின் அடிப்படையில் புனே பறந்து நிஷியை அதிரடியாகக் கைது செய்தனர். சேலத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பியோடிய லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய மூவரையும் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment