| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!

by satheesh on | 2026-09-23 12:59 PM

Share:


ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!

கூடலூரில் 190 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது; கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் பறிமுதல்

 தேனி மாவட்டம் கூடலூரில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 190 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவின் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் பைபாஸ் சாலையில் ஒத்தைவீட்டு பிரிவு அருகே நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அடுத்தடுத்து வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் இருந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், இரண்டு வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டனர். அதில், 95 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 190 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்து கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரளத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் : ராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனியின் மகன் முத்துப்பாண்டி (25,) ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் முகமது அனிபா (45), சாயல்குடி துரைச்சாமி புரத்தை சார்ந்த சேர்ந்த முகமது சுல்தான் மகன் அலியார் (46), கடலாடி அருகேயுள்ள அப்பனூர், மேற்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஈஸ்வரமூர்த்தி (34)கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 190 கிலோ கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்களுடன் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்தக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக ராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment