| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி

by aadhavan on | 2026-07-31 06:33 PM

Share:


'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி

எய்ம் ஃபார் சேவா நடத்திய, 'ராதா - பக்தியின் உருவகம்' நடன இசை நிகழ்ச்சியில் ஒரு காட்சி.

கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வலிமையான கருவி என்பதைக் நிரூபிக்கும் வகையில், எய்ம் ஃபார் சேவா சார்பில், சென்னையில் நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி, மன வளர்ச்சிக் குறைபாடுகளுடன் வாழும் வயது வந்த ஆண்களுக்காக செயல்பட்டு வரும் 'சுவாமி தயானந்தா க்ருபா கேர்' மையத்திற்கு வழங்கப்பட்டது. 10 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் இந்த மையம், பாதுகாப்பான தங்குமிடம், தொழிற்பயிற்சி, சத்தான உணவு, மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட முழுமையான சேவைகளை வழங்கி, அங்குள்ளவர்களின் திறன்களை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

 

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை, அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஷீலா பாலாஜி வரவேற்றார். தொடர்ந்து டாக்டர் கிரிதர், க்ருபா கேர் மையத்தின் சேவைகள் மற்றும் சமூகப் பணிகளை விளக்கினார். அமெரிக்க செயல்பாட்டு தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசன் ராமன், சேவைப் பணிகளை மேலும் விரிவுபடுத்த பொதுமக்களின் ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் மையத்தின் பணிகளுக்கு ஆதரவாக தங்களது பங்களிப்புகளை வழங்க முன்வந்தனர். 

மாலையின் முக்கிய அம்சமாக, புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான ஷிஜித் நம்பியார் மற்றும் பார்வதி மேனன் வழங்கிய "ராதா - பக்தியின் உருவகம்" என்ற பரதநாட்டிய அரங்கேற்றம் அமைந்தது. 

பிரவீன் கோத்கிந்தி புல்லாங்குழல், அனூர் வினோத் ஷ்யாம் மிருதங்கம், சாய் வம்ஷி தாள வாத்தியம் இசைத்தனர். குரல் இசை, நட்டுவாங்கம் போன்ற வழக்கமான கூறுகள் இன்றி, புல்லாங்குழல் இசையை மையமாகக் கொண்டு முழு நடனமும் வடிவமைக்கப்பட்டது. இசை, தாளம், அசைவு என மூன்றின் சங்கமமாக இந்த நடனம், பாரம்பரியக் கலையை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.