| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நான் ரெடி முதல்வர் விஜய் .!!!! நீங்கள் ரெடியா...???

by admin on | 2026-07-24 08:07 PM

Share:


நான் ரெடி முதல்வர் விஜய் .!!!! நீங்கள் ரெடியா...???

சட்டசபையில் தி.மு.க.,வை எதிர்கொள்ள ஹோம்ஒர்க் செய்கிறார் முதல்வர் விஜய்...?

கூட்டுரையாளர். -மா.பாண்டியராஜ்.


எவ்வளவோ கடும் விமர்சனங்களை தாங்கிய தி.மு.க., விஜய் பேசும் ஒரு வார்த்தையை கூட எதிர்கொள்ள முடியாமல் துடித்துப்போய் விடுகிறது. விஜய்யை பேச்சாற்றலால் வீழ்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு தி.மு.க., வந்து விட்டது. இதனால்  தி.மு.க.,வை அதே பேச்சாற்றலால் வீழ்த்த முதல்வர் விஜய் ஹோம்ஒர்க் செய்கிறார்.


எத்தனை தோல்விகள், எத்தனை அவமானங்கள், எத்தனை சங்கடங்களை சந்தித்து, அத்தனை தோல்விகளில் இருந்தும் மீண்டு, மீண்டும், மீண்டும் அரியணை ஏறிய தி.மு.க., தன் வரலாற்றில் முதன் முறையாக நிலை தடுமாறி்ப்போய் நிற்கிறது. காரணம் மரபு ரீதியான மோதலுக்கு முதல்வர் விஜய் தயாராக இல்லை. எப்போதும் ஒரு ஹீரோயிசம், பஞ்ச் வசனம் பேசி கைதட்டலையும், பாராட்டையும் பெற்று விடுகிறார்.

விஜய்யின் பஞ்ச் வசனத்திற்கும், ஹீரோயிச ஆக்‌ஷனுக்கும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் வீழ்ந்து தான் கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி ஒரு புதுவழியை விஜய் தேர்ந்தெடுப்பார் என்று கணிக்க முடியாமல் தவித்த தி.மு.க., இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டது.

தி.மு.க., எப்போதுமே பேச்சாற்றலிலும், மிரட்டலிலும் வல்லவர்களை கொண்ட கட்சி. பேச்சில் மிரட்டினால் கூட விஜய் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து உடனடி ரீயாக்ட் செய்கிறார். அப்போது விஜய் செய்தது சரியா? என்று கேட்பவர்களை விட முதல்வரை இப்படி பேசுவது சரியா?  என்று கேட்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி விடுகிறது..

இதனால் விஜய் மீதான விமர்சனங்களை வைக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க., தான் அசிங்கப்பட்டு நிற்கிறது. இப்படி பாரம்பரியமும், அதீத திறமையாளர்களையும் கொண்ட ஒரு கட்சி, ஒரு குட்டித்தலைவரிடம், புதிதாக வந்த ஒரு தலைவரிடம், சினிமா மாயையில் வென்ற ஒரு தலைவரிடம் தினமும் ‘‘பல்பு’’ வாங்குவதை தி.மு.க.,வினரே ரசிக்கவில்லை.

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்த தி.மு.க., தலைவரை நோக்கி, அவர் பேசியதை ஏன் கண்டிக்கவில்லை என பல ஆயிரம் வார்த்தை கணைகள் பாய்ந்தன. இதுவும் தி.மு.க., எதிர்பாராத ஒன்று. இதனால் பல்வேறு விஷயங்களையும் ஆய்வு செய்த தி.மு.க., தனது பாதைகளை மாற்றிக் கொண்டுள்ளது.

விஜய் அரசை திட்டும் விஷயத்திற்காக கூலி ஆட்களை வைத்துக் கொள்வோம். தி.மு.க.,வினர் யாரும் இனி திட்ட வேண்டாம் என கூறி விட்டது. (இப்படி தி.மு.க., வைத்த கூலி ஆட்களில் ஒருவர் தனது வசை பாடலை தொடங்கி விட்டார்.) தி.மு.க.,வினர் இனிமேல் சட்டசபையில் புள்ளி விவரங்களோடு அண்ணாமலை பாணியில் விளாசித்தள்ள வேண்டும். விஜய்யின் பலகீனம் என்ன... அவரால் நேரடி விவாதத்தில் உடனுக்குடன் பதில் அளிக்க முடியாது.

எந்த பதிலையும் சொல்லும் முன்னர் அவர் யாரிடமாவது எழுதி வாங்கித்தான் பேச வேண்டும். இப்போது சட்டசபையில் முழு நேர நேரடி ஒளிபரப்பினை சட்டசபை செயலகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் தி.மு.க.,வினர் தவெகவை விமர்சிக்க முழு அளவில் தயாராகுங்கள். பேச்சில் மட்டுமே விஜய்யை வீழ்த்த வேண்டும். வேறு எந்த முயற்சிகளும் செய்ய வேண்டாம் என தி.மு.க., தலைமை தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு கட்டளையிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு மெக்கானிசமும் விஜய் தலைமையில் தானே செயல்படுகிறது. உளவுப்போலீசார் மூலம் தி.மு.க.,வின் திட்டத்தை அறிந்த முதல்வர் விஜய், தி.மு.க., எந்தெந்த பிரச்னைகளை கிளப்பும், அதற்கு தாம் என்ன மாதிரி பதில் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்ய தொடங்கி விட்டார்.

ஒருபுறம் தி.மு.க.,விற்கு பதில் சொல்வது மட்டும் பத்தாது. அந்த கட்சியின் மீதும் வார்த்தைகளால் தாக்குதல் நடத்தி நிலைகுலைய வைக்க வேண்டும். இதற்கு என்னென்ன சப்- ஜெக்ட்களை பற்றி பேச வேண்டும் என குறிப்புகளை தாருங்கள் என்று தன் ஆலோசனை குழுவிற்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக பார்ட்டி பண்ட், டாஸ்மாக் ஊழல், நகராட்சி நிர்வாக ஊழல், நகராட்சி பணியாளர்கள் நியமன ஊழல் முறைகேடு, போக்குவத்துத்துறை பணியாளர்கள் நியமன முறைகேடு, பத்திரப்பதிவுத்துறையில் நடந்த ஊழல்கள் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து தாருங்கள். இந்த விஷயங்களில் தி.மு.க.,வை மேலும், மேலும் பலகீனப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளையும் உடனே எடுங்கள்.  தி.மு.க.,வின் பலகீனமான பகுதியின் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே அவர்களை எதிர்கொள்ள முடியும் என்று உத்தரவிட்ட விஜய்... இதற்கான ஹோம்ஒர்க்குகளை செய்ய தொடங்கி விட்டார்.

ஆக, இதுவரை ராஜா வேடம் மட்டும் அணிந்திருந்த விஜய்யை உண்மையான ராஜாவாக தி.மு.க., உருவாக்கி விட்டது. தி.மு.க., போன்ற வலுவான கட்சிகளை எதிர்கொண்டால் மட்டுமே...  அதாவது தி.மு.க.,வை எதிர்கொண்டு தீவிர பயிற்சி எடுத்தால் மட்டுமே... எதிர்காலத்தில் விஜய் தனது அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்கான சுய பலத்தை பெற முடியும். அது தான் இப்போது நடந்து கொண்டு உள்ளது.  ஆக எப்படி பார்த்தாலும், விஜய்யை ஒரு முழுமையான வல்லமை நிறைந்த அரசியல்வாதியாக தி.மு.க., உருவாக்கி வருகிறது என்று தவெகவினர் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment