by satheesh on | 2026-08-02 07:24 PM
தேனி,தேவாரத்தை சேர்ந்த மணிக்குமார்(39)இவர் மனைவி சந்திரகலா(37) குடும்பப்பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் .நேற்று இரவு திருப்பூரில் இருந்து சந்திரகலா தனது மகள் சஞ்சனாஸ்ரீ(13) உடன் தேவாரத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.. வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மறைந்து இருந்த மணிக்குமார் பேருந்தில் ஏறி அரிவாளால் சந்திரகலா மற்றும் மகள் சஞ்சனா ஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் மணிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!