| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை...! காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2026-03-18 02:19 PM

Share:


நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை...! காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்...!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திண்டுக்கல் பகுதியில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,96,420 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கத் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு, சிட்கோ அருகே பறக்கும் படைத் தலைவர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல் நகரப் பகுதியிலிருந்து மாலப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். அந்த காரில் வந்த அருண்ராமசாமி என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1,96,420 ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

தேர்தல் விதிமுறைப்படி ரூ.50,000-க்கு மேல் உரிய ஆதாரமின்றிப் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்தப் பணத்தைப் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பணம் அரசுப் பாதுகாப்புடன் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் கூறுகையில்: "பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆதாரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) சமர்ப்பித்து, முறையான விசாரணைக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்," எனத் தெரிவித்தார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் நள்ளிரவில் நடந்த இந்த அதிரடிப் பறிமுதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment