by satheesh on | 2026-03-16 07:57 PM
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரை அதிரடியாக மாற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் ஏற்பட்ட குறைபாடுகளைக் காரணம் காட்டி, தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறைச் செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான துஷ்யந்த் நாரியாலா புதிய தலைமைச் செயலாளராகவும், 1997-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சங்கமித்ரா கோஷ் புதிய உள்துறைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடக் கூடாது என்றும், புதிய அதிகாரிகள் இன்று மதியம் 3 மணிக்குள் பொறுப்பேற்றுத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!