| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2026-07-20 01:27 PM

Share:


எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...!  எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் எலும்புகளை உடைப்போம் என்று அச்சுறுத்தும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் பேச்சுக்கு, தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் வன்னி அரசு கடுமையான கண்டனத்தையும், வலுவான பதிலடியையும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில்,  திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரைத் தனிப்பட்ட முறையில் தாக்கியும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய திமுக எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளதாவது: "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பார்த்து, 'எலும்புகளை உடைப்பேன்' என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுவது அநாகரிகத்தின் உச்சம். சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு நான் ஒன்றை மட்டும் தெளிவாக நினைவுபடுத்த விரும்புகிறேன்; எலும்புகள் என்பது அவர்களுக்கு மட்டும் அல்ல, இங்கு இருக்கும் எல்லோருக்கும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது."

திமுக-வின் இந்தத் தொடர் அவதூறு மற்றும் வன்முறைப் பேச்சுக்கள் குறித்து அமைச்சர் மேலும் விமர்சிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்த மிகப்பெரிய தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே திமுகவினர் தற்போது இவ்வாறு அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் தவெக அரசுக்கு அளித்துள்ள அமோக ஆதரவைச் சகித்துக் கொள்ள முடியாமல், பொதுக்கூட்ட மேடைகளில் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்க முயல்கிறார்கள். வன்முறையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் தவெக அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது. அதன் ஒரு பகுதிதான் இந்தத் தகுந்த கைது நடவடிக்கை.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிகாலையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதற்குத் தற்போது அமைச்சர் வன்னி அரசு கொடுத்துள்ள இந்தப் பதிலடி, தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

"அரசியல் நாகரிகம் கருதி எதிர்க்கட்சிகள் தங்களது பேச்சுக்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றும் ஆளுங்கட்சித் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment