by Vignesh Perumal on | 2026-07-22 11:13 AM
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தகுந்த மருத்துவப் படிப்பும், உரிமமும் இன்றி சட்டவிரோதமாகக் கிளினிக் நடத்திப் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த 60 வயது முதிய பெண்மணியை மருத்துவக் குழுவினரும், நத்தம் காவல்துறையினரும் இணைந்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியாகக் கிளினிக் ஒன்று இயங்கி வந்தது. இந்த கிளினிக்கில் நத்தம் முளையூர் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (60) என்ற பெண்மணி, தான்தான் மருத்துவர் என்று கூறி அப்பகுதி மக்களுக்குக் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தார். மேலும் நோயாளிக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் வழங்கி வந்துள்ளார்.
ஆனால், இவர் மருத்துவப் படிப்பு எதுவும் படிக்கவில்லை என்றும், 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே கொடுத்துப் படித்துள்ளவர் என்றும், சட்டவிரோதமாகக் கிளினிக் நடத்தி வருகிறார் என்றும் மாவட்ட மருத்துவத் துறைக்கு ரகசியப் புகார்கள் சென்றன.
கிடைத்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், செந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள அந்த கிளினிக்கிற்கு நேரடியாகச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பாப்பாத்தி தகுந்த மருத்துவ சான்றிதழ்கள் எதுவுமின்றி, பொதுமக்களுக்கு நேரடியாக மருத்துவச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சை அளித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவக் குழுவினர் பாப்பாத்தியைப் பிடித்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அந்த கிளினிக்கில் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மருத்துவக் குழுவினர் அளித்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் பாப்பாத்தி மீது சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இவர் எத்தனை ஆண்டுகளாக இந்தப் பகுதியில் போலி கிளினிக் நடத்தி வருகிறார்? இவருக்கு மருந்துகள் எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டன? என்பது குறித்து நத்தம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகுதியற்ற நபர்களிடம் பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டாம் என்றும், இது போன்ற போலி மருத்துவர்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் மருத்துவத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !