by Vignesh Perumal on | 2026-07-21 05:24 PM
திண்டுக்கல்லில் சொகுசு காரில் கஞ்சா கடத்திச் சென்ற இரண்டு பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 2 செல்போன்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் நகர்ப் பகுதியில் சட்டவிரோதப் பொருட்களின் புழக்கம் மற்றும் கஞ்சா விற்பனையைக் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பகுதியாக, திண்டுக்கல் நகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) கார்த்திக் அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் (SI) காதர்மைதீன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் சௌந்தர்ராஜா மில் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகச் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு சொகுசு காரைப் போலீசார் மறித்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.
சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் காரை முழுமையாகச் சோதனை செய்தபோது, காரின் உட்பகுதியில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
காரில் கஞ்சா கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவரையும் போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
அதாவது, சரவணகுமார் (35) E.B. காலனி, திண்டுக்கல் மற்றும் முத்துமாரிசாமி (27) அஞ்சுகம் காலனி, சின்னாளப்பட்டி ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். மேலும் 1.200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 1 கார் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர் .
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார், செல்போன்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இவர்கள் இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள்? திண்டுக்கல்லில் யாருக்கெல்லாம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள்? இதன் பின்னணியில் பெரிய கஞ்சா கும்பல் ஏதேனும் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !