by admin on | 2026-07-22 02:22 PM
பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்....!!
வைகை அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயிகள் அல்லாத நபர்கள் மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார்
வைகை அணையின் நீர்த்தேக்க பகுதிக்குள் 3 அடி உயரத்திற்கு மணல் சாலை அமைத்து மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது .
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது . இந்த நிலையில் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக சரிந்தது . இதனால் வைகை அணையில் தூர்வாரப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது .
இதன் காரணமாக அணையின் நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள வண்டல் மணல்களை விவசாய பணிகளுக்காக முறையாக ஆவணம் கொடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் வைகை அணையின் நீர்தேக்கப் பகுதியில் விவசாயிகள் அல்லாத நபர்கள் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டு செங்கல் காளவாசலுக்கு விற்பனை செய்வது புகார்கள் எழுந்து வருகின்றன. வைகை அணை நீர்தேக்கப்பகுதிக்குள் மூன்றடி உயரத்திற்கு மணல்சாலை அமைக்கப்பட்டு அதன் மூலம் டிராக்டர்களில் சென்று மணலை திருடி செல்வதாகவும் இதனால் வைகை அணையில் நீர்தேக்கப் பகுதிகள் தண்ணீர் தேக்கமுடியாமல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினர் முறையாக ஆய்வு செய்து வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
இப் புகார் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது....!!!!
குற்றச்சாட்டு : வியாபாரிகள் மண் அள்ளிச்செல்ல வசதியாக, அணை நீர்த்தேக்கத்துக்குள் சட்டவிரோதமாக, நீரோட்டத்துக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் சாலை அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள் மற்றும் டிராக்டரில் மண் கொண்டு செல்லப்படுகிறது.
விளக்கம்:
அணை நீர்த்தேக்கத்துக்குள் மண் அள்ள எந்த வியாபாரிக்கும் அனுமதி இல்லை. வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வரும் விவசாயிகளுக்கு மட்டுமே விவசாய நிலப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் அள்ளிக் கொள்ள சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல ஏதுவாக மண்பாதை அமைத்துத் தருவது பொறுப்பு அலுவலரின் கடமை. அப்பாதை அணைக்கட்டுமானத்துக்கும், கரைக்கும் ஆபத்தில்லாத விதத்தில் அமைய வேண்டும். இவ்விதிக்குட்பட்டே அணைக்கட்டுமானத்துக்கும், கரைக்கும் ஆபத்தில்லாத விதத்தில் தற்காலிக மண் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதை நீரோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ஓரிரு அடி உயர தற்காலிக மண் பாதையானது, சதுர கிலோ மீட்டர் கணக்கில் விரிந்த நீர்த்தேக்கத்தில் ஓட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் என்பது தொழில்நுட்ப அபத்தம்.லாரி, டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களில் வண்டல் மண் அள்ளிச்செல்லப்படவில்லை என உறுதியாகவே தெரிவிக்கப்படுகிறது. டிராக்டர்களில் மட்டுமே மண் கொண்டுசெல்லப்படுகிறது.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !