by satheesh on | 2026-03-16 08:23 AM
கன்னியாகுமரி மாவட்டம் : நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில், பெற்ற தாயையே காதலனுடன் சேர்ந்து மகள் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னம் வலை கம்பெனி தெருவைச் சேர்ந்த கலாவதி (42) என்பவர், தனது இளைய மகள் சுருதி (19) மற்றும் மூத்த மகளுடன் வசித்து வருகிறார். சுருதி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது, அதே கல்லூரியைச் சேர்ந்த அபிலாஷ் என்ற மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. அபிலாஷிற்கு அவசர பணத் தேவை இருப்பதாகக் கூறி கேட்டதற்கிணங்க, சுருதி தனது தாயார் கலாவதி தனது மகள்களின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் நகையை ரகசியமாக எடுத்து காதலனிடம் கொடுத்துள்ளார். நகை மாயமானது குறித்து அறிந்த கலாவதி, இது குறித்து தனது மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரிய வர, தாய்-மகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுருதியின் வீட்டிற்கு வந்த அபிலாஷிடம் தாய் கலாவதி நகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அபிலாஷ், அங்கிருந்த உருட்டுக் கட்டையால் கலாவதியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த கலாவதியை, தனது காதலனுடன் சேர்ந்து கொண்டு சுருதி துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். கலாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கலாவதி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், சுருதி மற்றும் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். படிக்கும் வயதில் காதலில் விழுந்து, பெற்ற தாயைக் கொல்லத் துணிந்த மாணவியின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வருங்கால சந்ததியினரின் இந்த செயல் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !