by Vignesh Perumal on | 2026-03-05 01:19 PM
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் சகோதரர் முருகேசன், இன்று காலை மதுரை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். அவர் தற்போது மேல்சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சண்முகையா. இவருடைய உடன்பிறந்த சகோதரர் முருகேசன். இவர் இன்று (05.03.2026) காலை மதுரையை நோக்கித் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
மதுரை ஒத்தக்கடை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், உள்ளே இருந்த முருகேசனுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பயணிகள் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் டயர் வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் வாகனம் மோதியதா என்ற கோணத்தில் ஒத்தக்கடை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?
திமுக எம்.எல்.ஏ. சண்முகையாவின் சகோதரர் படுகாயம்..! கொடூர விபத்து...!
கல்யாண மோசடி...! ஏமாற்றி ரூ.2 லட்சம் சுருட்டிய கும்பல்..! ஒருவர் கைது..!
ஓபிஎஸ் இணைப்பு - திமுகவில் சலசலப்பு ! அதிர்ச்சியில் அறிவாலயம் !!