by satheesh on | 2026-03-05 05:43 PM
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா ;
உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா 2026 அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ சனீஸ்வரபகவான், இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயர்கிறார் ! சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி, விசுவாவசு வருடம், மாசி மாதம் 22ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, ஆங்கில தேதியின்படி 06.03.2026, காலை 8 மணி 12 நிமிடம் 24 வினாடிக்கு, ஸ்ரீ சனீஸ்வர பகவான் கும்ப இராசியிலிருந்து மீன இராசிக்கு சனிப்பெயர்ச்சி கொள்ள இருக்கிறார் !
https://chat.whatsapp.com/DCOhszOaNCHHdvderTNvBp
இந்த சனிப்பெயர்ச்சி நேரத்தை முன்னிட்டு, கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய, தேவஸ்தானம் நிர்வாகம் கீழ்க்கண்ட வரிசைகளை ஏற்பாடு செய்துள்ளது. இலவச தரிசன வரிசை ரூ.300/- செலுத்தும் சிறப்பு தரிசன வரிசை , ரூ.600/- செலுத்தும் சிறப்பு தரிசன வரிசை, ரூ.1000/- செலுத்தும் சிறப்பு தரிசன வரிசை . அனைத்து டிக்கட்களும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். டிக்கெட், பாஸ் போன்ற அனைத்திலும் தேவஸ்தான ஹாலோகிராம் ஒட்டப்பட்டிருக்கும் என்பதால், பக்தர்கள் போலி டிக்கெட்டுகளை தவிர்த்து உண்மையான டிக்கெட்டுகளை மட்டுமே பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பக்தர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகள் பெறுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இடங்களில் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக வெய்யிலிலிருந்து பக்தர்களை பாதுகாக்க, அனைத்து வரிசைகளிலும் தகர கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளதால், வரிசைகளில் உட்கார்ந்து செல்லும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பிரத்யோக தனி அடைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு தனிப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன வரிசையில் நிற்கும் போது பயன்படுத்தும் கழிவறை வசதிகளும் போதுமான அளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில போக்குவரத்து துறையினருடன் இணைந்து கூடுதல் பேருந்து போக்குவரத்து வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக் நிறுத்துவதற்காக, தனிப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன பக்தர்கள் அதிகம் குவியும் முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தற்காலிக குளிர்சாதன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தை குறைத்து, பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய இது உதவும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கும் நோக்குடன், - வரிசைகள் ஆரம்பிக்கும் இடங்கள் - தரிசனம் முடிந்த பின் பக்தர்கள் வெளியேறும் பகுதிகள் - பக்தர்கள் அதிகம் நடந்து செல்லும் வழித்தடங்கள் இவற்றில் அன்னதான மண்டபங்கள் அமைக்கப்பட்டு, இலவச அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இலவச கழிவறைகள் மற்றும் தற்காலிக கழிவறை வசதிகள் போதுமான அளவில் அமைக்கப்பட்டுள்ளன. நளன் திருக்குளத்தில் அனைத்து பக்தர்களும் சௌகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. பெண்கள் பக்தர்களுக்காக தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. சோப்பு ஷாம்பு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது!
இந்த சனிப்பெயர்ச்சி :
ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சார்பில், வரும் 06 மார்ச் 2026, மாசி 22, சனிப்பெயர்ச்சி நாளில், அனைத்து பக்தர்களும் பக்தியுடனும் அமைதியான முறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆலய விதிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டு, ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்று பாக்கியம் அடைவீர்கள்!!
தகவல்: செய்தி விளம்பரத்துறை, காரைக்கால்!
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!