by admin on | 2026-03-03 10:20 PM
தேனி மாவட்டம்
சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி மற்றும் குடியரசு தின
விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்
பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.03.2026) சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி டெல்லி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் 04.02.2026 முதல் 08.02.2026 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 5-வெள்ளி, 1-வெண்கலம் என பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தின போட்டிகள் -2026
(RDG)– யில் தேனி விளையாட்டு விடுதி மாணவர்கள் பங்கேற்று, கபாடிப் போட்டியில்
14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கப்பதக்கமும், கூடைப்பந்து போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் வெண்கலப்பதக்கமும், நீச்சல்போட்டிகளில் 2 வெள்ளி, 1-வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்குபெற்று தங்கப் பதக்கம் பெற்றமைக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை செல்வி நித்திய ஹரிணி மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையினை (High Cash Incentive) பெற்றுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் சர்வதேச மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை முன்னிட்டு,
வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி, மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவக்குமார், விளையாட்டு பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு...!!!
விளிம்பு நிலை மக்களுக்கு ஜாக்பாட் ! ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி !!
பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை...! திமுக கவுன்சிலர் அதிரடி கைது...!
படத்தைத் தடை செய்க..! இல்லையெனில் கடும் விளைவுகள்..! சீமான் எச்சரிக்கை...!
இரட்டைக்கொலை விவகாரம்...! தவெக தலைவர் விஜய்..! கடும் கண்டனம்..!