by Vignesh Perumal on | 2026-03-04 12:26 PM
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து புதிய சரிவை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே தங்கத்தின் விலை சரிவுடன் காணப்பட்டது.
நேற்று விற்ற விலையிலிருந்து ரூ.2,120 குறைந்து, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.265 குறைந்து, தற்போது ரூ.15,200-க்கு விற்பனை ஆகிறது.
உலகளாவிய பொருளாதாரக் குறியீடுகளின் மாற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவதே இந்த திடீர் விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் நிலவி வருகின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) காலமானார்...!
சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை ! முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து அதிரடி.!!
கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது....!!!
கிரிக்கெட் வீரர்...! நடிகர் சிவகார்த்திகேயன்...! குடும்பத்துடன் திடீர் விசிட்...!
கஞ்சா..! கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது...! அதிரடி நடவடிக்கை...!