by satheesh on | 2026-03-04 03:11 PM
தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை ! கூண்டோடு விலக முடிவு !!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்களைக் கொண்டு தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்த அதிரடி மாற்றம் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, 12 மாவட்டச் செயலாளர்கள் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் தனியார் உணவகத்தில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது: "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் எக்காலத்திலும் 'தீய சக்தி' எனச் சுட்டிக்காட்டிய திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தொண்டர்களுக்குச் செய்த துரோகம்." கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர், உரிய மரியாதை கிடைத்தால் மீண்டும் அதிமுகவில் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) இணையலாம் எனக் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர், சசிகலா தலைமையிலான அணியுடன் இணைந்து செயல்படலாம் என முன்மொழிந்தனர். நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த மாவட்டச் செயலாளர் எஸ். ஏசாதுரை பேசியதாவது: "உங்கள் எண்ணமே எனது முடிவும் ஆகும். ஜெயலலிதா அவர்களால் எதிர்க்கப்பட்ட திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும், சின்னம்மா (சசிகலா) தரப்பிலிருந்தும் எங்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு எங்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கிறதோ, அங்கு இணைவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!