by Vignesh Perumal on | 2026-03-05 11:13 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, குடிப்பழக்கத்தால் மனைவியிடம் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மர்ம மரணம் என்று கருதப்பட்ட இந்த வழக்கை, போலீசார் சாதுர்யமாக விசாரித்து கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
பழனி அடுத்த தெற்கு தாதநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (62). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த மகுடீஸ்வரன், தனது மனைவி மாரியம்மாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் மகுடீஸ்வரன் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார், முதற்கட்டமாக இதனை 'சந்தேக மரணம்' எனப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மகுடீஸ்வரனின் உடல் வீட்டில் இருந்தபோது, அவரது இரண்டாவது மகன் கண்ணதாசன் (29), தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மிகவும் அவசர அவசரமாகச் செய்துள்ளார். பிரேதப் பரிசோதனை அல்லது முறையான விசாரணைக்கு முன்னதாகவே உடலைத் தகனம் செய்ய அவர் காட்டிய வேகம் போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகத்தின் அடிப்படையில் கண்ணதாசனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது: "தந்தை மது போதையில் தாயிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதைக் கண்டு ஆத்திரமடைந்தேன். அப்போது ஏற்பட்ட மோதலில் தந்தையைத் தாக்கியபோது, அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தார்" என்ற திடுக்கிடும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
கண்ணதாசனின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய பழனி தாலுகா போலீசார், கண்ணதாசனைக் கைது செய்தனர். குடும்பத் தகராறில் தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?
திமுக எம்.எல்.ஏ. சண்முகையாவின் சகோதரர் படுகாயம்..! கொடூர விபத்து...!
கல்யாண மோசடி...! ஏமாற்றி ரூ.2 லட்சம் சுருட்டிய கும்பல்..! ஒருவர் கைது..!
ஓபிஎஸ் இணைப்பு - திமுகவில் சலசலப்பு ! அதிர்ச்சியில் அறிவாலயம் !!