by Vignesh Perumal on | 2026-03-04 12:10 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்குச் சாலை மார்க்கமாகப் பயணித்த விஜயைக் காண, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் பேசிய விஜய், விவசாயிகளின் கஷ்டங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
"எனக்கு விவசாயம் குறித்து ஆழமாகத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தவெக ஆட்சி அமைந்தவுடன் நாம் தீர்க்க வேண்டிய மிக முக்கியப் பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையும் ஒன்று," என உறுதிப்படத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாகத் திமுகவை 'தீயசக்தி' என விமர்சித்த விஜய்,
"ஓம் சக்தி பராசக்தி... திமுக ஒரு தீயசக்தி என்று இப்போது குழந்தைகூடச் சொல்லத் தொடங்கிவிட்டது. எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையில் இருக்கும் அன்பின் பிணைப்பில் யாராலும் நுழைய முடியாது," என அதிரடியாகப் பேசினார்.
தேர்தல் வெற்றியை மையப்படுத்தி தொண்டர்களிடமும் மக்களிடமும் விஜய் சில கேள்விகளை முன்வைத்தார். "ஊழலற்ற தவெக ஆட்சியை அமைக்க நீங்கள் எனக்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே? ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் (தவெக முழக்கம்) கேட்கும் தானே? அந்த விசில் சத்தம் வாக்குகளாக மாறும்தானே?"
எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் விஜய்யின் பயணம் தாமதமானது. பல இடங்களில் அவர் காரின் மேல் நின்று தொண்டர்களைச் சந்தித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழலற்ற ஆட்சியைத் தருவதே தனது இலக்கு என்பதைத் தஞ்சை மண்ணில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெல்டா மாவட்டமான தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!