by Vignesh Perumal on | 2026-03-03 03:41 PM
சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகத் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற விமானத்தில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோர் பயணம் செய்துள்ளனர். அப்போது, அங்கு பணியிலிருந்த 25 வயதுடைய பெண் ஊழியரிடம் இருவரும் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் ஊழியர் இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டார்.
பாதிக்கப்பட்ட பணிப்பெண், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையக் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பினர். இருப்பினும், அவர்கள் இருவரும் அன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தெரிகிறது.
விசாரணையைத் தவிர்த்து வந்த நிலையில், டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய திமுக கவுன்சிலர் பிரபாகரனை மீனம்பாக்கம் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த நண்பர் தியாகுவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை - டெல்லி இண்டிகோ விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரே இது போன்ற செயலில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!