by admin on | 2026-09-30 12:22 PM
நேர்மையும் கடமை உணர்வும் கொண்ட ஒரு உன்னத காவல்துறை அதிகாரி!
தேனி மாவட்ட காவல்துறையில் உத்தமபாளையம் DSP ஆக பணியாற்றி வரும் திரு. சந்திரசேகரன் ஐயா அவர்களைப் பற்றி காவல்துறையில் பணியாற்றும் சிலர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள், ஒரு அதிகாரியின் நேர்மை மற்றும் கடமை உணர்வின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகின்றன.
அரசாங்கம் தனக்கு வழங்கியுள்ள வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், மக்கள் பணி மற்றும் அலுவல் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய மனைவி அலுவலகத்திற்கு தன்னைப் பார்க்க வந்தாலும், அரசு வாகனத்தைப் பயன்படுத்தாமல், பணியில் உள்ள காவலரின் இருசக்கர வாகனத்தைப் பெற்றுச் சென்று அவரை அழைத்து வருவார் என்றும், அதற்காக பயன்படுத்திய பெட்ரோல் செலவையும் தாமே வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் இருந்து சால்வை, பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட எந்தவிதமான அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல், மரியாதை நிமித்தமாக யாராவது எலுமிச்சம்பழம் வழங்கினால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
தன்னைச் சந்திக்க வருபவர்கள், வந்த விஷயத்தை மட்டும் பேச வேண்டும்; எந்தவிதமான தனிப்பட்ட எதிர்பார்ப்பும், அன்பளிப்பும் இல்லாமல் மக்கள் தன்னை அணுக வேண்டும் என்ற எளிமையான நடைமுறையுடன் அவர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதைவிட நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தையும் காவல்துறையில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
திரு. சந்திரசேகரன் ஐயா அவர்களின் தாயார் மறைந்தபோது, தாயாரின் இறுதிக் காரியங்களை நிறைவேற்றிவிட்டு, இரண்டு நாட்களிலேயே மீண்டும் அலுவலகத்திற்கு வந்து தனது அலுவல் பணியைத் தொடர்ந்தார் என்று அந்த சார்பு ஆய்வாளர் என்னிடம் தெரிவித்தார்.
தாயை இழந்த துயரம் எவ்வளவு பெரியது என்பதை வார்த்தைகளால் அளவிட முடியாது. அத்தகைய ஆழ்ந்த துயரத்திலும், குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு, தனது பணிக்குத் திரும்பி மக்கள் சேவையைத் தொடர்ந்தார் என்று கேட்கும்போது, அவர் மீது ஏற்கனவே இருந்த மரியாதை மேலும் ஒரு படி உயர்கிறது.
நேர்மை… எளிமை… கடமை உணர்வு… மக்கள் சேவை…
இந்த நான்கு பண்புகளையும் தனது செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தி வரும் காவல்துறை அதிகாரிகளைப் பார்ப்பது உண்மையிலேயே அரிது.
DSP திரு. சந்திரசேகரன் ஐயா அவர்களுக்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாகவும், தேனி மாவட்ட மக்கள் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் நேர்மையான பணியும், மக்கள் சேவையும் தொடர்ந்து சிறக்கட்டும் ஐயா!
மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!!
தங்கத் தகடு மோசடி - போலி வாகன சோதனை ! 2 போலீஸ் உட்பட எட்டு பேர் அதிரடி கைது !!
மேகமலையில் 98 கிராம மக்களை வெளியேற்றும் விவகாரம் - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் !
தீராத லாட்டரி மோகம் - தனியாத அதிர்ஷ்ட தாகம் ! கோடிகளை அடைய நினைத்த முதியவர் - கோடிகளை இழந்த பரிதாபம் !!
டி.ஸ்.பி., யின் நேர்மை இந்து எழுச்சி முன்னணி பாராட்டு....!!!!