| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

லஞ்சம் - அதிகாரிகள் விறுவிறுப்பு ! லஞ்ச ஒழிப்பு போலீஸ் - சுறுசுறுப்பு !! மாற்றம் காணுமா ?

by satheesh on | 2026-08-09 05:58 PM

Share:


லஞ்சம் - அதிகாரிகள் விறுவிறுப்பு ! லஞ்ச ஒழிப்பு போலீஸ் -  சுறுசுறுப்பு !! மாற்றம் காணுமா ?

ராமநாதபுரம்: பரமக்குடியில் லஞ்ச விவகாரத்தில் ஆர்டிஓ அதிகாரி கைதாகி உள்ளார். நேற்றைய தினம், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செக்யூரிட்டியின் ஊதியத்தை விடுவிப்பதற்காக ரூ.10,000 லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) லதா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இராசாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் (24) என்பவர் தனது பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதை செய்து தர இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவேல் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டனின் அறிவுறுத்தலின்படி, நேற்று விஏஓ ஆபீஸில் வைத்து ரசாயனம் தடவிய ரூ.2,000 பணத்தை மணிவேல் விஏஓ நந்தகுமாரிடம் கொடுத்தார்.. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் பரமக்குடி ; இந்த அதிர்ச்சி முடிவதற்குள் அடுத்த அதிர்ச்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.. பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் சரவண பெருமாள். விதிமுறைகளின்படி, சவுடு மண் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு வருவாய் கோட்டாட்சியரே அனுமதி அளிக்க வேண்டும். இந்நிலையில், சவுடு மண் எடுக்க அனுமதி கோரி வந்த ஒரு மனுதாரரிடம், அனுமதி வழங்குவதற்கு ரூ.50,000 லஞ்சம் தர வேண்டும் என ஆர்.டி.ஓ சரவண பெருமாள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ அதிகாரி கைது, : லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த மனுதாரர், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீலஸில் உடனடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில், அதிகாரிகளின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.50,000 பணத்தை மனுதாரர் கோட்டாட்சியரிடம் வழங்கினார். பணத்தை அவர் பெற்ற அந்த நொடியே, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீசார் சரவண பெருமாளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இந்த லஞ்சப் பணப் பரிமாற்றத்திற்கு உடந்தையாக செயல்பட்ட கோட்டாட்சியரின் டிரைவர் சுந்தர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

சிக்கிய அரசு ஊழியர்கள் : அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் எண் (94981 80936) அறிவிக்கப்பட்டு தீவிர விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தவெக, லஞ்சத்தை ஒழிப்பதாக கூறி தீவிர நடவடிக்கை எடுத்தபோதிலும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து கைதாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்பு வாட்ஸ்அப் எண்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், துணை ஆட்சியர் அளவிலான உயர் அதிகாரிகளே லஞ்ச வழக்குகளில் சிக்குவது அரசின் நிர்வாகத் திறனுக்கே சவாலாக மாறியுள்ளது. வெறும் கைது நடவடிக்கைகளுடன் நிறுத்தாமல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
K. Jeyakumar
at 2026-08-08 14:31:11
Always welcome

Leave a Comment