by admin on | 2026-08-09 10:10 AM
கோல்டன் பிளானட் முதியோர் பாரம்பரிய இல்லம் சார்பில் ரிஷி நகர அனுபவ மையம் துவக்க விழா!
சென்னை திருவான்மியூர் தலைமையகமாக க்கொண்டு இயங்கி வரும் கோல்டன் பிளானட் முதியோர் பாரம்பரிய இல்லம் சார்பில் மகாபலிபுரம் அருகில் ரிஷி நகர அனுபவ மையம் துவக்க விழா ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (ஓய்வு) கே. ஸ்கந்தன், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் சேர்மன் என்.எல் ராஜா, புதுடெல்லி சட்ட நிபுணர் கணேஷ் சந்துரு, எம் ஒ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் அர்ச்சனா பிரசாத், சென்னை கிருஷ்ணாத்வானி நடனப்பள்ளி கலையியல் இயக்குனர் மற்றும் நிறுவனர் டாக்டர் காயத்ரி கிருஷ்ணவேணி லட்சுமணன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி. எஸ் .கிருஷ்ணமூர்த்தி, பரசு பல் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் டாக்டர் செல்லையா வெங்கட்ராமன், மதுராந்தகம் கோவிந்தன் கோஷாலா மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் பி.வாசு, செங்கல்பட்டு ஸ்ரீ சதுர்வேதா பாடசாலை நிறுவனர் ஆர் காமகோடி, அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் வித்யாலக்ஷ்மி சீனிவாசன், ஹியகிரிவாஷ் பட்டு மாளிகை நிறுவனங்கள் சி எஸ் .துவாரகேஷ் மற்றும் சாதனா துவாரகேஷ், சவேரா குழுமம் மேலாண்மை இயக்குனர் ஏ.நினா ரெட்டி, இசை மழலை நிறுவனர் அபஸ்வரம் ராம்ஜி, கர்நாடக இசைக் கலைஞர் சைத்ரா சாய்ராம், கலாசிந்து கலை பள்ளி நிறுவனர் மற்றும் இயக்குனர் நடிகை சிந்து ஷியாம், வாரக ரூபம் புகழ் சாய் விக்னேஷ் மற்றும் யுவகலா பாரதி காவிய முரளிதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி இனிதே தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
லஞ்சம் - அதிகாரிகள் விறுவிறுப்பு ! லஞ்ச ஒழிப்பு போலீஸ் - சுறுசுறுப்பு !! மாற்றம் காணுமா ?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி - தொடரும் கைது !
சென்னையில் தலைமை சார்ந்த ஊக்கமளிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!!!
ரிஷி நகர அனுபவ மையம் திறப்பு விழா....!!!
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!