by Vignesh Perumal on | 2026-05-11 11:05 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி பகுதியில், இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலை ஓரம், இன்று காலை இரண்டு இளைஞர்கள் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட ஆய்வில், இந்தக் கொலைகள் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
சுமார் அரை கிலோமீட்டர் இடைவெளியில் இரு இளைஞர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவருமே பெட்ஷீட் கொண்டு சுற்றப்பட்டு, அதன் மேல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள் ஒரே பாணியைக் கையாண்டுள்ளதால், இது ஒரு கும்பலால் நடத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர்களுக்கு சுமார் 25 முதல் 30 வயது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்கள் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக இந்தப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டார்களா? அல்லது இங்கேயே கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் காணாமல் போன இளைஞர்களின் விவரங்களைச் சேகரித்து வரும் போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சாலை ஓரத்தில் இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !