by admin on | 2026-08-21 06:54 PM
சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (21.08.2026) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் அனைத்துப் பிரிவினருக்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களும் பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டது.
பொதுப்பிரிவினர், இம்முகாமில் 24 தனியார்துறை நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் 61601 120-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் 22 நபர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான ஆணைகளையும், 72 நபர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கானப் பணி ஆணைகளையும், 31 நபர்களுக்கு திறன்பயிற்சி பெறுவதற்கான ஆணைகளையும் மற்றும் 1 சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசுதாரருக்கு பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, வேலைநாடுநர்களுக்கு கடனுதவி தொடர்பான விவரங்கள் குறித்து தாட்கோ, மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) திருமதி சுப்பம்மாள், உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) திரு.மோகன்ராஜ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திரு.சுந்தரராஜன், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஆனந்த் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
T. Muthukamatchi evidence Editor 9842337244
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 22 பேருக்கு பணி ஆணை வழங்கல்....!!!
துணி வியாபாரப் போர்வையில் போதைப் பொருள் கடத்தல் - குடும்பத்துடன் கூண்டோடு கைது ! கேரள களால்த்துறை அதிரடி !!
போடி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு செய்தார்....!!!"
ரோல் பால் போட்டியில் தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம்....!!!
சப் ஜூனியர் ரோல் பால்ஸ்கேட்டிங் மாணவிகள் அசத்தல்....!!!!