| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மதுரையில் காந்தி அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி....!!!!

by admin on | 2026-08-16 06:21 PM

Share:


மதுரையில் காந்தி அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி....!!!!

காந்தி மியூசியத்தில் 80 வது சுதந்திர தின விழா*காந்தி அஸ்திக்கு பொதுமக்கள் மலரஞ்சலி* 

மதுரை காந்தி மியூசியத்தில் இந்திய நாட்டின் எண்பதாவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றி பொதுமக்கள் காந்தி அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் 

இந்திய நாட்டின் எண்பதாவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவிற்கு மியூசியம் செயலாளர் நந்தாராவ் தலைமை தாங்கினார். காந்தி அருங்காட்சியக பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். நிகழ்வில் முரளி கிருஷ்ணா தேவதாஸ், காந்தி சிந்தனை கல்லூரி முதல்வர் சேது ராக்காயி, முன்னாள் முதல்வர் முத்துலட்சுமி மதுரை மல்லிகை ரோட்டரி சங்கத் தலைவர் செயலாளர், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் செயலாளர் கார்த்திக், பட்டய தலைவர் நெல்லை பாலு. சுப்புராஜ், மகேந்திரன், டுகாதி, சுப்பிரமணியன், ஜோசப், பாலகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர்

அதனைத் தொடர்ந்து காந்தி அருங் காட்சியகத்தில் உள்ள காந்தி அஸ்தி உள்ள இடத்தில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.நிகழ்வில் சங்கரன்கோவில் உலக அமைதி கோவில் புத்த பிக்கு மாசோ இஸ்தானி பிக்குனி சிக்குசா கிமுரா உட்பட பலர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உலக அமைதிக்காக பாடுபட்டு வரும் புத்தபிக்கு  மாசோ இஸ்தானிக்கு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் சண்முகம் செயலாளர் கார்த்திக் இணைந்து அவருக்கு சால்வை அணிவித்து சிறப்பு விருது வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ் செய்திருந்தார்.


T. Muthukamatchi evidence Editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment