by admin on | 2026-08-15 10:17 PM
13 திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி மாற்றம்? – ஸ்டாலின் ஆலோசனை என தகவல்
சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள 13 பேரை மாற்றுவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ. வேலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சாக்கோட்டை க.அன்பழகன், தேனி மாவட்டச் செயலாளர் நா.இராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி மற்றும் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன் ஆகியோரின் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்படும் நிர்வாகிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வழங்கி அவர்களை தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட அளவில் கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலும், எதிர்வரும் தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டும் இந்த அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புதிய நிர்வாகிகள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்குவது தொடர்பாக திமுக தலைமையிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கட்சித் தலைமையின் இறுதி முடிவு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே மாற்றங்கள் உறுதி செய்யப்படும்.
T. Muthukamatchi evidence Editor 9842337244.
மாநிலம் முழுவதும் 13 மாவட்ட செயலாளர் களை மாற்றுவதற்கான ஆலோசனையில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...!!
வேலூரில் தலைகீழாக தொங்க விடப்பட்ட தேசிய கொடி...?? நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...!!!
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!