by admin on | 2026-08-15 07:15 PM
சமூக சேவையை பாராட்டி கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு நற்சான்றிதழ்
திருப்பூர்: சமூக நலனில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி, 80-வது சுதந்திர தின விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார்.
கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்வது, தூய்மைக் காவலர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை ஆதரவற்ற 125 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், திருப்பூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 4,000 தூய்மைக் காவலர்களுக்கு உணவு, உடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உடுமலைப்பேட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமூகத்தின் தேவைகளை உணர்ந்து, எந்தவித எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து சேவை செய்து வரும் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் பணிகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், இந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் கோபுரம் கோவிந்தராஜ் மற்றும் தலைவர் முனைவர் தம்பிரான் ரிஷபானந்தர் ஆகியோர் கூறுகையில், “எங்களது சமூகப் பணிகளை அங்கீகரித்து மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அங்கீகாரம் எங்களது சேவைப் பணிகளை மேலும் சிறப்பாகவும், தொடர்ந்து செய்யவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றனர்.
மாநிலம் முழுவதும் 13 மாவட்ட செயலாளர் களை மாற்றுவதற்கான ஆலோசனையில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...!!
வேலூரில் தலைகீழாக தொங்க விடப்பட்ட தேசிய கொடி...?? நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...!!!
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!