| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!

by admin on | 2026-08-15 07:20 PM

Share:


ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!

விவசாயிகள் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு


ஈரோடு மாவட்டத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் லேகாஸ்ரீ, திர்க்ஷதா, ஆனந்தி, நிஷா பார்ஜோ, கவி வர்ஷினி, நதியா ஆகியோர் கிராம ஊராட்சி நாற்றங்காலில் இருந்து பெறப்பட்ட பல்வேறு மரக்கன்றுகளை விவசாயிகளின் இல்லங்களில் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ப்பை ஊக்குவித்தனர்.

இதில் மகிழம், நாவல், மந்தாரை உள்ளிட்ட பயனுள்ள மரக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, விவசாயிகளின் வீடுகளைச் சுற்றியுள்ள பொருத்தமான இடங்களில் முறையாக நடவு செய்யப்பட்டன.

மரம் வளர்ப்பதன் மூலம் வீடுகளைச் சுற்றி பசுமையான சூழலை உருவாக்குவதுடன், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

மேலும், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து, முறையான நீர்ப்பாசனம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வின் மூலம் விவசாயிகளிடையே மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, பசுமையான கிராமங்களை உருவாக்குவதுடன், நிலையான சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment