| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு.....!!!!

by admin on | 2026-08-11 07:21 PM

Share:


போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு.....!!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (1108.2026) போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamilnadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகள் அளவிலான மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் காணொளிக்காட்சி மூலம் இவ்விழா நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை முன்னிட்டு, தேனி மாவட்டம், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவின் கௌதம். இகா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உட்பட பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார். திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.வீராச்சாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.கலைக்கதிரவன், திரு.மகேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளர் (பெரியகுளம்) திரு.நல்லு. வருவாய் கோட்டாட்சியர் (பெரியகுளம்) (பொ) திருமதி கவிதா, உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திருமதி லெட்சுமி, கல்லூரி முதல்வர் திருமதி சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment